Wednesday, January 6, 2016

தமிழ் சினிமா ரசிகன்



என்னுடைய முதல் பதிவு சினிமாவை பற்றியும், அதன் ரசிகர்கள் பற்றியும் தான்.
நான் எப்போதும் சினிமாவுக்கு எதிரி இல்லை. மாதத்தில் 2 முதல் 3 சினிமா பார்க்கும் ஒரு சாதாரண ரசிகன் நான். ஆனால் சினிமாவை திரையுடன் நிறுத்த தெரிந்தவன்.
நான் பார்த்த பல தமிழ் ரசிகர்கள், ரசிகர்களாக இல்லாமல் வெறியார்களாக இருப்பது தான் கொடுமை. ஒரு ரசிகர் மன்ற தலைவனாக இருப்பவருக்கு பல வழிகளில் பணம் வரலாம். இதை ஒரு தொழிலாக கூட அவர்கள் செய்யலாம். ஆனால் ஒரு சாதாரண ரசிகன் தன்னுடைய சொந்த பணத்தை( பல சமயங்களில் அப்பாவின் பணம்) செலவு செய்து பாலாபிஷெகம் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன? அந்த பாலுக்கு அழும் எவ்வளவோ குழந்தைகள் இந்த நாட்டில் உள்ளது தெரியுமா உங்களுக்கு?
இதைவிட கொடுமை இது தெரிந்தும் எந்த ஒரு நடிகன்னும் இதை தடுக்கவில்லை. காரணம், இப்படி பட்ட முட்டாள் ரசிகன் இருக்கறவரைக்கும் தான் அவர்கள் கோடிகளில் சம்பளமும், ஆடி காரிலும் போகமுடியும். நாம எப்போ தான் திருந்த போறோம். நீ ஊத்தர பால் என்ன அவங்கமேல நேரா போய் விழுமா?(இது கடவுளுக்கும் பொருந்தும். அதை பற்றி வேற இடத்துல பேசலாம்) நிஜமாலுமே உங்களுக்கு தெரிச்சு தான் பண்றீங்களா?



உங்களுக்கு ஒரு நடிகன் முன்மாதிரியா (??????????) இருந்த, அவர் நடிச்ச படத்த ஒரு தடவ இல்ல 2 தடவ பாக்கலாம். ஆனா அதுக்காக அவன அண்ணன்னு சொல்றதும் தலைவன்னு சொல்றதும், உங்க அளப்பரை தாங்க முடியல. தெரியாம தான் கேக்கறேன், உங்க அண்ணன் இப்படி தான் ரவுடித்தனம் பண்ணுவாராஇல்ல அடிக்கடி வேற வேற பொண்ணுங்க(நடிகை) கூட ரொமான்ஸ் பண்ணுவாரா? (உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது. அது சினிமால தானே). அது மட்டும் தான் சினிமாவா?

சினிமால பொண்ணுங்கள காப்பாத்தும் உங்க அண்ணன் நிர்பயாவ ஏன் காப்பாத்தல? பாகிஸ்தான் தீவிரவாதிகள பறந்து பறந்து சுட்ட உங்க அண்ணன், ஏன் பதன்கோட்ல காப்பாத்தல?. இது தான் நிஜம்.
சினிமாவ பாத்து தெரின்சுக்க எவ்வளவோ இருக்கு. ஆனா நமக்கு தான் நயன்தாராவையும் திரிசாவையும் பாத்து ரசிக்க மட்டுமே தெரியுமே?.

தமிழ் நாட்ட பொருத்தவரைக்கும் சினிமா மோகம் அழியாம வல்லரசு ஆகா முடியாது. ஒரு ரசிகன் இன்னொரு நடிகணையும் அவர் ரசிகர்களையும் கேவலமா பேசறார், அது மட்டும் இல்லாம அவங்க குடும்பத்தையும் அசிங்கமா பேசறார். இப்படி இருக்கும் போது எப்படி தனிமனித ஒழுக்கம் வளரும்? முதல்ல சினிமாங்கறது ஒரு பொழுதுபோக்கு, அதில் நடிப்பது நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதன்ன்னு நாம தெரின்சுக்கணும்.  
தமிழ் படிக்க தெரிந்த அனைவருக்கும் வணக்கம்,

இந்த வலைபக்கத்தில் உள்ள எல்லா கருத்துக்களும் என்னுடைய சொந்த கருத்துக்களே. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எழுத முயச்சிக்கிறேன். ஒருவேளை என் கருத்து உங்களை காயப்படுத்தினால், தெரியப்படுத்துங்கள். தவறான கருத்துக்கள் நீக்கம் செய்யப்படும்.